பறக்கும் கனவு
பட்டாம்பூச்சி போல
பறந்து சென்று
மலர்களின் தேன்துளி
ருசித்துப்பார்த்து ..
பாடும் குயிலாய் நான்
மாறி
ஜோடிக்குயிலை தேடிவந்து
வானவில் பிடித்து
வர்ணங்கள் குழைத்து
வைத்து
பல வண்ணத்தில் கோலங்கள்
வாசலில் போட்டுவிட்டு
வெண்ணிலா வெட்டி
தோரணம் கட்டி
தெருவெல்லாம் வெளிச்சம்
கொடுத்து நிற்க
கலைமகள் வந்து இசை மீட்ட
காற்றோடு கடலும் அசைந்தாட
வானுக்கும் பூமிக்கும்
நான் பறந்து வாழ்த்துக்கள்
பெற்று வாழ்ந்து வர
நடுநிசியில் கனவு கண்டு
நான் வடித்தேன்
கலையாத கவியாக...