தாயே விட்டு போகாதே

ஓர் குடும்பத்தில் கணவன் மனைவி சண்டை போட்டுக்கொள்கிறார்கள்,அதன் விளைவாக மனைவியோடு சேர்த்துஅவர்கள் பெற்றக் குழந்தையையும் விட்டு தந்தை பிரிந்து செல்கிறார்.கோபத்தில் தாயும் அச்சிறுவனை ஏற்க மறுக்க நினைக்கும் வேளையில் ,அச்சிறுவனின் மனம் வேதனையுறும் நிலையை உணர்த்தும் பாடல் இதோ உங்கள் முன்னிலையில் எளிமையான என் வரிகளோடு ...............

எங்கே போவது என்தாயே
என் உள்ளம் சொல்லுது உயிர் நீயே
அப்பா என்னை வெறுத்தாலும்
அம்மா நீயே காக்க வேண்டுமே .....
1
மழைக்காளான் போல நான் மலர்ந்த போது
மனமெல்லாம் மகிழ்ந்தாயே
நினைவெல்லாம் நின்றாயே
என் கோவிலில் நீ சாமியே
நான் வாழவே நீ தேவையே
உன் மடி சாயவே
என் மனம் ஏங்குதே
அந்நொடி கூடவே
மரணம் வந்தால் தாங்குவேன்
அம்மா அம்மா வருவாயே
அன்பால் என்னையும் அணைப்பாயே
தூறலும் விழுகுதே என் கண்ணிலே
மெளனமே இந்நேரம் உன் பதிலே
உன் பதிலே
உன் பதிலே.........
--(எங்கே)
2
பூலோகம் எங்கும் பூந்தென்றல் போல
என் மூச்சில் கலந்தாயே
எல்லாமாய் ஆனாயே
உன் தோளிலே
நான் தூங்கவே
இந் நேரமே
இங்கே நீ வா
உன் வாசம் தாக்குதே
மண் வாசம் தோற்குதே
என் நாவும் கூடவே
நின் நாமம் பாடுதே
சாமியே சாமியே நீதானம்மா--ஏன்
சோதனை வேதனை வேண்டாம்மா
மேகமாய் பொழியுதே என் விழியுமே
சோகமாய் கரையுதே கல் நெஞ்சமே
கல் நெஞ்சமே--உன்
கல் நெஞ்சமே...........
--(எங்கே)
3
மண்ணோடு மழை போல
என்னோடு தான் சேர
நீ இங்கு வந்தாலே போதுமே
என் சோகம் ஓடிப் போகுமே
போ காதே விட்டு போ காதே

அங்கே வருவது அப்பா தானே
அவரோடு சேரலாம் இப்போ தானே
வெறுத்தேதான் சென்றாலும்
வெண்மை தான் அவருள்ளம்
வேண்டாம் என சொல்லாதே
வேதனையில் நிறையாதே
நீங்..காத நிழ லாக
நின் பாசம் வேண்டுமே
வேண்டுமே
வேண்டுமே ...............
--(எங்கே)

எழுதியவர் : ஜேம்ஸ் (15-Dec-14, 2:53 pm)
பார்வை : 138

மேலே