அரசியல் விளையாட்டு

அங்கு மாறி இங்கு மாறி
தேர்தல் விளையாட்டு ஆரம்பம்
இலங்கையில் தேர்தல்
காலம் ஆரம்பம்

அங்கிருந்தவன் இன்று இங்கே
இங்கிருந்தவன் நாளை அங்கே
நடுவில் இருந்து கணக்காளர்
இன்று எத்தனை பேர் கட்சி
மாறினர் எனும் சச்சரவில்

கட்சி மாறினவன் இவனை
குறை சொல்ல மாறாதவன்
அவனை குறை சொல்ல
மேடையில் வார்த்தை யுத்தம்
ஆரம்பம்

நடுவில் மக்கள்
பக்கத்தில் அரசியல் வாதிகள்
மக்களை ஆசை வார்த்தைகளால்
அங்கொன்றுமாய் இங்கொன்றுமாய்
இழுக்க பெரும் பிரயத்தனம்

ஒரு கட்சியில் அதிக மக்கள்
இன்னொன்றில் அதைவிட மக்கள்
போக்குவரத்தை கஷ்டப்படுத்தி
நடு வீதியில் அரசியல் கூட்டம்

'போக்குவரத்தை சீர்படுத்துவோம்'
ஒருவன் மேடையில் தொண்டை
கிழிய கத்துவான்
மக்கள் கைதட்டி வரவேற்பர்
ஆனால் பின்னால் வீதியில்
அரசியல் கூட்டத்தால் ஏற்பட்ட
வாகன நெரிசல்

தேர்தல் காலம் வர
பொய்யர்களும் வருவர்
பாதையெங்கும் விற்பனைக்கு
போல் கட்சிக்காரர்களின் படத்துடன்
விளம்பரம்

சொல்லப்போனால் ,
அரசியல் ஒரு விளையாட்டு
அரசியல் ஒரு விளம்பரம்
மொத்தமாய் அரசியல் ஒரு
கேலிக் கூத்து

எழுதியவர் : fasrina (15-Dec-14, 3:40 pm)
பார்வை : 118

மேலே