கடவுளின் விருப்பம்

மிதிவண்டியில்
கொண்டு வந்த
அரிசி
பை கிழிந்து
சாலையில்
கொட்டிப்போனதில்
கை பிசைந்து
நின்று கொண்டிருக்கிறாள்
ஒரு சிறுமி !

விரைந்தோடி வந்து
விசாரிக்கிறார்
பக்கத்துக்
கடைக்காரர் !

அரிசியை
' மேலாக்க '
எடுத்துப் போடச்சொல்லி
அறிவுறுத்துகிறார்
ஒரு வழிப்போக்கர் !

தனது
இல்லத்திலிருந்து
பை கொண்டுவருகிறாள்
ஓர்
இல்லத்தரசி !

அழுகையின்
விளிம்பில்
நின்று கொண்டிருக்கும்
அச்சிறுமியைத்
தேற்றுகிறாள்
ஒரு பாட்டி !

இவ்வாறாக விரியும்
இக்காட்சியைப்
பின்னணியாக வைத்து
ஒரு செல்ஃபி
எடுத்துக் கொள்ள
விரும்புகிறார்
கடவுள் !

எழுதியவர் : குருச்சந்திரன் (15-Dec-14, 5:16 pm)
Tanglish : kadavulin viruppam
பார்வை : 142

மேலே