கொஞ்சும் மழலைகள் 555
மழலை...
உண்மையான அழகு
சிரிப்புக்கும்...
உண்மையான அழகு
அழுகைக்கும்...
மழலைகளை தவிர
வேறு யார்...
மழலையிடம் ஒரு பொம்மையும்
பணகட்டுகளையும் கொடுங்கள்...
தட்டி பறிக்கும்
பொம்மையை...
பணகட்டுகளை அல்ல...
இதுதான் வேண்டுமென்று
பிடிவாதம் செய்யாது...
நெருப்பு துண்டு சுடும்
என்று தெரியாமலே...
கைகளில் எடுக்க
துடிக்கும்...
அழ தெரியும் மற்றவரை
அழ வைக்கக் தெரியாது...
மண்ணில்
விழ தெரியும்...
அடுத்தவரை விழ
வைக்க தெரியாது...
சிரிக்க தெரியும்...
சிரிப்பால் மற்றவரின்
சோகத்தை மறைக்க தெரியும்...
செல்லங்களுக்கு இணை
குட்டி செல்லங்களே.....

