முக நூல் நண்பா

முக நூலில் வந்தாய் நீ
புது முக நண்பனாய்
புது புது கருத்துக்களை
புத்துணர்வில் தந்தாய் நீ.

உன் புது முகம் கண்ட நான்
பூரித்தே போய் விட்டேன்
உன் புத்தம் புது எழுத்துகளில்
இவ்வுலகம் நான் அறிந்தேன்.

என் நட்பு கூட்டத்திலே
நீயும் வந்து கூடி விடு
முக நூல் வழியாக
நட்பு பாலம் அமைத்திடுவோம்.

நல்லதையே நம் நினைத்து
நண்பர்களுக்கு எடுத்து சொல்லி
நம்பிக்கையோடு நாம் அனைவரும்
நலமாய் வாழ்ந்திடலாம்..

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (16-Dec-14, 4:01 pm)
சேர்த்தது : மன்சூர் அலி
Tanglish : muga nool nanbaa
பார்வை : 246

மேலே