சில பெண்களை பார்க்கையில்

கண்ணகிபோல்
தலைவிரி கோலமாய் காற்றில் பறக்கும்
அந்த கூந்தலில் மலர்கள் தீண்ட வாய்ப்பில்லைதான்....

வளையல் இடமாறி கிடக்கிறது காதில்
கை விரல்களோ மருதாணி சிகப்பலகை அறிந்திருக்காது....

பாசி மாலை அழகுதான்
ஒன்றாக இருக்கையில்
இங்கோ கழுத்து நிறைய பல நிறங்களில்....

வெட்டப்பட்ட புருவம்
ஏனோ ஒதுக்கிவிட்டீர்கள் செந்தூர பொட்டினை....

வெண்ணிற கண்கள் அழகிகை
இமையில் தடவிய சாயம் மறைத்து பயமுறுத்துகிறது....

வெட்டிவிட மறந்த விரல் நகங்கள்
கொஞ்சம் சிறியதுதான்
விட்டலாச்சாரி படத்தில் வரும்
மோகினியின் நகங்களோடு ஒப்பிடுகையில்....

உடலோடு ஒட்டிய ஆடைகள்
ஏனோ மறைப்பதில்லை
மறைக்க வேண்டிய சில பாகங்களை....

இடுப்போடு நிற்காத ஜீன்ஸ்
அதை இறுக்கி பிடிக்கதானோ
இவ்வளவு இருக்கமாய் தைக்கபட்டுள்ளது அந்த ஆடை….

இப்படி அலைந்தால்
தினம் காலை முதல் மாலை வரை
உங்களை எத்தனை கண்கள் மேய்ந்திருக்கும்....

மார்டன் உலகம்
கவர்ச்சிக்கும் கர்ப்புக்கும் இடையே
தொலைந்திருக்கும் சில பெண்ணகளின் வாழ்க்கை....

மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்றால்
இந்த அரைகுறை ஆடையும் வேண்டாமே....

அழகாய் இருப்பது அழகுதான்
ஆனால் வெறும் கவர்ச்சி பொருளாக மாறிவிட்டது
ஜவுளி கடை பொம்மை போல் உங்கள் அழகு.....

உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம்
ஆனால் உங்கள் கற்ப்போடு
தினம் கனவுலகில் குடும்பம் நடத்திவிடுகின்றனர் பல நல்லவர்கள்....

இவ்வளவு சொல்வதால்
நானும் நல்லவன் கிடையாது
என் கண்களும் சில பொழுதுகளில்
சில பெண்களை இப்படி பார்க்கும்போது
கனவுலகில் சில நேரம் வாழ்ந்துதான்விடுகிறது....

எங்கே தவறு தொடகியதோ
அங்கே திருத்திகொண்டிருந்தால்
நானும் நல்லவனாகவே இருந்திருப்பேன்....

முடிந்தளவு மூடி மறையுங்கள்
உங்கள் அழகு பல பேர் ரசிப்பதர்க்கில்லை
ஒருவனுக்காய் பாதுகாத்து கொள்ளுகள்
உண்மையான அழகினை அதில் காணுங்கள்....

எழுதியவர் : பாலமுதன் ஆ (11-Apr-11, 2:26 pm)
சேர்த்தது : பாலமுதன் ஆ
பார்வை : 992

மேலே