தவறுகள்
நம் தவறுகளை
நாம் என்றும் உணர்வதில்லை !
சுட்டிகாட்டப்பட்டாலோ
தட்டிகேட்கப்பட்டாலோ
மட்டுமே உணர்கிறோம் சிலசமயம்..
ஆனாலும்-
சுட்டிக்காட்டப்பட்டதை
தட்டிக்கழிக்க பார்க்கிறோம் !
தட்டிக்கேட்கப்படும்போது
முட்டிப்பார்க்க முயலுகிறோம் !
உள்மனது முணுமுணுத்தால்
உள்வாங்கிக்கொள்ளுவோம் -என்றாலும்
வெளிப்படையாய் ஏற்பதற்கு !
வெட்கம் கொள்கின்றோம் !
அடுத்தவன் தவறையெல்லாம்
எடுத்துரைக்க தவறுவதில்லை - அவன்
தட்டிக்கழித்தாலும் -நம்மோடு
முட்டிப்பார்த்தாலும்
கோபம் கொள்கின்றோம் !
கண் விழிக்கும் நொடியை
கச்சிதமாய் உணரும் நாம்
தூக்கத்தில் விழும் நொடியை
உணர்வதுண்டோ சொல்லுங்கள் !
தவறுவதும் அது போல் தானோ ?
இங்கே தவறுகளுக்கு
நியாயம் கற்ப்பிக்கப்படும்போது
நியாயங்களும் கூட
தவறக்கற்றுகொள்கின்றன !