ஆயிரம் காலத்து பயிர்கள் கவிதை

*
பள்ளிக்கூடத்தில் பயின்றப்
பட்டாம்பூச்சிகளை
வேட்டையாடிய வேடர்களே
நீங்கள் அழித்தது
ஆயிரங் காலத்துப் உயிர்கள்.
*
இளம் குழந்தைகளை
இரக்கமின்றி கொன்றொழித்த
கொடூர மதம் பிடித்த யானைகளே
நீங்கள் அழித்தது
செழித்து வளர வேண்டிய
ஆலவிருட்சங்கள்.
*
அன்பான குழந்தைகளின்
ஆசைக் கனவுகளைச் சிதைத்த
அகோரி அரக்கர்களே
நீங்கள் துண்டாய் வெட்டியெறிந்தது
பறவைகளில் பட்டுச் சிறகுகள்.
*
மனசாட்சிகளை மதங்களிடம்
அடகு வைத்து விட்டு
மண்ணில் பிறந்த குழந்தைகளை
அழித்தக் கம்சர்களே
கல்விக் கண்திறக்கும் முன்னெ
காலனின் நரக எல்லை
மரணத்திற்குள் தள்ளிவிட்டீர்களே…?
*
அன்பு வழிமுறையை கைவிட்டு
வன்முறையினை பின்பற்றும்
வழிப் போக்கர்களே
நீங்கள் அழிக்க நினைத்தது
பள்ளியில் பயிலும் இளம்
மாணவத் தும்பிகளை அல்ல
உலகில் உன்னதமாய் வாழும்
உயிர்களைப் பறிப்பதே
உங்கள் லட்சிய இலக்கு
*
பட்டு ரோஜாப் பூக்களைக் கிள்ளிப்
பறித்துவிடுவது எளிது
பதியம்போட்டு வளர்ப்பது தான்
பெரும் இஷ்டம் மிகக் கஷ்டம்.
உங்கள் பதினொராவது விரல் கொண்டு
உயிர்களைப் பறிக்காதீர்கள்
நாளை உங்களுக்காகக்
காத்திருக்கின்றன….??.
[ டிசம்பர் – 2014 - பாகிஸ்தான் பெஷாவர் நகரில்
உயிர் இழந்தப் பள்ளிக் குழந்தைகள் நினைவாக… ]
ந.க. துறைவன் கவிதை.

எழுதியவர் : ந.க.துறைவன் (18-Dec-14, 11:45 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 77

மேலே