கணிப்பெனுங் காட்டேரி -ரகு
வானிலை ஆராய்ச்சியின்
வெள்ளமெனுந் துல்லியக் கணிப்பில்
தூரலோடுத் தூர்ந்துபோனது வானம்
திசைகாட்டியின் கப்பல்பயணம்
காணாமற்போனது கடல்மார்க்கத்தில்
வெட்டுக்கணிப்பு மாறிப்போக
வீழ்ந்துவிட்டது காயோடு சேர்ந்தக்கிளையும்
மருத்துவம் நிர்ணயித்த மரணத்தைத்
தள்ளிப்போட்டது காலத்தேக் காலம்
உள்ளே வெளியே ஜாம்பவான்களிடம்
ஒன்றுவிடாமல் பிடுங்கித்தின்றது
கணிப்பெனுங் குரூரக்காட்டேரி
எந்திரக்கணிப்பு மந்திரன்கணிப்பு
மாறியக்கணிப்புகள் மலைபோல்க்குவிய
மணமாகாத முதிர்கன்னி ஒருத்தி
இன்றுதான் வாழ்க்கையைத் தூக்கிலிட்டாள்
முட்டாளொருவனின் முன்னூறு கணிப்பால்!