யாது மழை சேமிப்பு -ரகு
அருகருகேயிருந்த
மரத்தளிர்களை வேரோடுப்பிடுங்கி
வெளியில் வீசினான்
ஜல்லிகற்கள் மணல் சகிதம்
மேடையமைத்தான் வாசலருகில்
துரிதமாகவே நடந்தது
மழைநீர் சேகரிப்புப்பணி
புகைப்படம் எடுக்கச்சென்ற நான்
கூடவே மரத்தளிர்களையும் பதிந்து
கல்லறையமைத்தேன் ஆக்கத்திறனில்
மழைஈனும் மரங்களுக்கு!