வவ்வால்

இறக்கை
கட்டிப்
பறக்கும்
முட்டி மோதியே
முகர்ந்தே
கனியைக் குறி
வைக்கும்.....

கண் பார்வை
பகலில் இல்லை
என்றாலும் ஒரு
பழமையான
வீடு கிடைத்தாலே
அங்கே குடித்தனம்
அமைக்கும்
விட்டு ஓட மறுத்து
தலைகீழாகத்
தொங்கும்.....

உயர்ந்த புளிய
மரத்துக்கும்
பரந்த ஆல
மரத்துக்கும்
சொந்தக் காரன்
இந்த வவ்வால்...

உண்ணும்
கனியை
சென்ற இடமெல்லாம்
துப்பியே பூமிக்கு
விதை கொடுத்து
மனிதனுக்கு மரம்
கிடைக்க வழி வகுக்கும்.....

விஷம் கொண்ட
உயிர் இல்லை
யாரையும் தீண்டுவதும்
இல்லை இருந்தும்
மனிதன் அதை
விடவது இல்லை.....

மூட நம்பிக்கையின்
முதல் கட்டமாக
வவ்வால் வந்தால்
தரித்திரியம்
என்ற ஒரு
வார்த்தையைக் கூறி
அதை கொலை
செய்வதிலே அவன்குறியாக உள்ளான்

அவையும்உயிரே
அவையாளும்
நன்மை உண்டு
என்பதை நினைக்கவே
மறந்து விட்டானா
இல்லை மனிதனே
மறுத்துப் போன
மனதை வரமாகப்
பெற்று விட்டானா
என்பதுதான்
கேள்விக் குறி விடை
கூற யார் ரெடி......

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (18-Dec-14, 7:27 pm)
பார்வை : 136

மேலே