தூக்கத்தில நடக்கிற வியாதி போல
இமை மூடி
இதயம் திறந்து
இசை கேட்டு
இன்பம் அடையும் நேரம்
தீடிர் என்று என்ன நேர்ந்தது ??
மன்னவன் குரல்
மகுடி போல
மனதை மயக்க
மதி கலங்கி
ஓடிப்போனேன் அவன் பின்னே
இருந்த இடத்தை மறந்து ......
அவன் பின்னே ஓடி
மூச்சும் இளைத்துவிடவே
விழிகளை மூடி பெரு மூச்சும் விடும் பொழுது
காதோடு காற்றாய் வீசிச் சென்றான்-ஒரு
உணரமுடியாக் காதலை......
விழிகளை சட்டென்று திறக்க
பட்டென்று பறந்து போனான்
கைகளுக்குள் அகப்படாமல் சென்று விட்டான்
பட்டாம் பூச்சியாய் ....
இனிய குரல் இன்னிசை கேட்டு
இடை விலகாமல் தொடர்ந்தே
இறுதியில் அவன் முகம் காண வேண்டும் என்றே
எண்ணிய என் மனதுக்கு இணங்க
ஓடிச் சென்றேன்
அவனை நாடிச் சென்றேன் ...
தாகம் தீர்க்கும் நீர்ப் பொய்கை -ஆனால்
என் தாகம் மட்டும் தீராமல் நிற்கிறது
அருகில் இருந்த பொய்கை பார்த்து
அதையும் தாண்டி அவன் பின்னே
நான் செல்ல
மரத்துக்கு பின்னே அவன் ஒழிய
உனக்கு பின்னே நான் நின்று
எட்டிப் பிடித்தேன் கையோடு
கரங்கள் கைப்பற்ற உன்னை -என்
மனதும் தொலைந்து போக
விழிகள் தழுவி
விரல்கள் கோர்த்து
கட்டி அணைத்தேன்
கனவில் .....
உனையல்ல ...
என் வீட்டின் முன் நின்ற
காட்டு மரத்தை .....
நனவில் ....
மொத்தமாய் தூக்கத்தில் நடக்கிற வியாதி போல
திரிந்து செல்கிறேன் உன் முகத்தை நினைவுபடுத்தி........
இருட்டில் .....