வலித்தாலும் சிரிக்கும்

இலக்கு நாள் நிர்ணயிக்கபட்டுவிட்ட
இறுதி கணம் நெருங்க நெருங்க
எதிரி யாரென தெரியாமலேயே
யுத்தத்தை எதிர்கொள்ள வேண்டிவரும்


நொடிபொழுது தொலைந்தாலும்
ஒரு பொழுதே இழந்ததாய்
எண்ணம் சோகம் பயிலும்


கணம் தாங்கமுடியாமல் கணப்பொழுதில்
தோல்வியை ஒப்புக்கொண்டு
சரணடைய நினைத்தால் - சாகவரம்
பெற்ற லட்சியம் சிலிர்த்தெழும்


எண்ணங்களாய் தோன்றும் எதிரிகளையும்
எட்டுத்திசை சூழ் பகைவர்களையும்
வெட்டி வீழ்த்தி விட்டு - வீரமுடன்
முரசறைந்து விழாகொண்டாடும்
லட்சிய கனவிற்கு ரணங்கள்
வலித்தாலும் சிரிக்கும்..!!!


சுகுமார் :-)

எழுதியவர் : மணிவேல் சுகுமார் (19-Dec-14, 3:13 am)
பார்வை : 489

மேலே