பிரிந்த நாள் -

நடக்கின்ற பாதை முடிந்து போகும்
முடிவே இல்லாத கடலும் ஓரிடத்தில் முடிவு காணும்

பகலை படைக்கும் கதிரவனும் மறைந்து போவான்
இரவை ஒளிர வைக்கும் சந்திரனும் கரைந்து போவான்

காலங்கள் ஓடி போகும்
காலதேவன் விரைந்து போவான்

கண்ணிலிருந்து வழிகின்ற நீரும் நின்று போகும்
உடலில் இருந்து உதிரும் உதிரமும் உறைந்து போகும்

மனித மனமும் மாறிப்போகும்
மாற்றம் என்னும் மோகத்தை தேடிப்போகும்

மண்ணை விட பெரிய விண்ணிற்கும் எல்லையுண்டு
மனித அன்பிற்கே எல்லை இல்லை .

எழுதியவர் : சதீஷ் ராமசாமி (19-Dec-14, 6:43 pm)
பார்வை : 223

மேலே