ஊரில் பார்க்கா அழகா நீ - இராஜ்குமார்

ஊரில் பார்க்கா அழகா நீ
~~~~~~~~~~~~~~~~~~~~

காலடி பதியா மண்ணா நீ
காலணி மிதிக்க மறுக்குது ..

கண்கள் காணா வானமா நீ
இமைகள் ரசிக்க துடிக்குது ...

விரல்கள் தட்டா தூசா நீ
கைகள் கடத்த நினைக்குது ..

இதயம் மீட்டா இசையா நீ
செவிகள் மாயமாய் மறையுது ..

தாளில் படாத எழுத்தா நீ
எண்ணம் முழுக்க மறக்குது ...

மலரில் வீசா வாசமா நீ
நாசி நயமாய் நடுங்குது ...

நீரில் மூழ்கா கல்லா நீ
படித்த தத்துவம் தோற்குது ...

ஊரில் பார்க்கா அழகா நீ
உயிரும் காதலில் உருகுது ...

- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (19-Dec-14, 7:28 am)
பார்வை : 921

மேலே