புது விதிகள்

ஒப்பனை செய்யப்பட்ட
மினுமினுப்பில்
தொலைந்து போன
அந்த அழகின்
தூரம் கண்டறிவோம் ...
அதுவே நாம்
விரும்பி ஏமாந்த
விஷயம் சொல்லும் !!...

ஒப்பனை செய்வது,
ஒப்பிட்டுப் பார்ப்பதால் ...
ஒப்புதலோடா?!தெரியவில்லை..

செலவு கூட்டும்
வேலையன்றி
அழகு கூட்டல்
என்ன செய்யும்?

தூய்மைக்கும் அழகுக்கும்,
தாய்மைக்கும் மலட்டுக்கும்
உள்ள தூரம்...
அழுக்கைக் கழுவாது
அழகு படுத்துவதால்
துர்நாற்றம் என்ன
தூரப் போய்விடுமா?!

கேள்வியில் மூழ்கும்போது
புரிந்த உண்மை சொல்கின்றேன்...

இங்கே
முகங்கள் மட்டுமல்ல!,
முழுதும் ஒப்பனை,ஒப்பனை....!!

எழுதியவர் : அபி (19-Dec-14, 9:26 am)
Tanglish : puthu vithigal
பார்வை : 72

மேலே