இவ்வளவேனும் காதல் செய் அறிமுகம் - யாழ்மொழி

தேவதையின் மறுபக்கம் தொடருக்கு ஆதரவளித்து வந்த அனைவருக்கும் என் நன்றிகள்...
"இவ்வளவேனும் காதல் செய்" என்ற எனது அடுத்த தொடர் க(வி)தையின் வாயிலாக மீண்டும் அனைவரோடும் பயணிப்பதில் அளவில்லாத ஆனந்தம்..
நமது கதையின் கதாநாயகன் " நித்திலன் "
நாயகி "நிதர்சனா "
வாஷிங்டன் நகரத்து நாகரீக வாழ்க்கைக்கு அப்பாற்பட்டு, தாயின் அன்பிற்கும், குடும்பத்தின் கௌரவத்திற்கும் பாதகம் விளைவிக்காத பகுத்தறிவாளனும், இலக்கிய நேசனுமான கண்ணியமானத் தமிழன்... உயர்படிப்பு முடிந்து அங்கேயே வேளையில் இருக்கும் "நித்திலன்"
தஞ்சை மாநகரத்தில் செல்வத்தில் பிறந்து, சீரோடு வளர்ந்து, பண்பும் படிப்பும் நிறைந்த தண்மதி "நிதர்சனா"வின் வாழ்க்கை துணையாகி அதற்கு பின் ஏற்படும் திருப்பங்களே கதைகளம்...
கவி நடையில் மீண்டும் ஓர் தொடர்கதை முயற்சி...
இனி நித்திலன் நிதர்சனாவோடு தொடரும் பயணத்தை உடனிருந்து அழகாக்கிட அழைக்கிறேன்..
கவிநடையில் தொடருவோம்...
மிக நன்றி