மானிடா துடிக்கிறது நெஞ்சம் ,,

கொல்லப்பட்ட பிஞ்சுக் குழந்தைகள்
செய்த பாவம் தான் என்ன ?
கொன்று குவித்து விட்டீர்களே !
இறந்த குழந்தைகள் சாபம்
உங்களை நிம்மதி யாக்கி விடுமா ?
தாயும் தந்தையும் கதறி
அழும் ஓலம் கேட்கவில்லையா ?
எந்தக் குழந்தையாய்
இருந்தால் என்ன ? இம்மண்ணில்
பிறந்த மானிட இனம் தானே ...!
இத்தகு பாதகத்தை செய்து விட்டு
இவ்வுலகில் நிலையாக இருப்பீரா நீர் ?
காடு வாழ் விலங்கின்
கண்ணியம் கூட
நாடு வாழ் மானிடா ...
உன்னிடம் இல்லை .
வாசமுடன் மலர்கின்ற பூக்கள் - அந்த
சின்னச்சிறு மழலைகள் .
கணமேனும் நல்லெண்ணம்
இல்லாராகி இப்படியோர்
இழிவான செயல் தன்னை செய்து விட்டீர் !
துடிக்கும் நெஞ்சத்தோடு
துயரமெனும் கடலில் பயணித்த
பயணிகள் நாங்கள் ..............

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (19-Dec-14, 1:36 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 90

மேலே