வெற்றி

வெற்றிக்கு எதிரி சோம்பல்
அதைத் தகர்த்து
மிதித்து முன்னேறு
வெற்றிக் கொடி படபடக்க
மேடையில் உயரத்தில்
முதன்மையாய் வீற்றிருக்க
தோல்விகள் காலடியில்
மிதிபட மிளிர்வாய்
துணை பல சேர்ப்பாய்!

உன் இயலாமை
இறையிடத்துக் குற்றமல்ல
நீ தப்பிக்க
மனசாட்சிக்கு எதிராய்
சொல்லும் போலி
சமாதான வார்த்தையாய்
சாந்தி பெறுகிறாய்
வெறு - உன்
இயலாமையை வெறு

சொல்லிரைக்க முன்
சிந்தி
தரம் பார்
நாவினாலே சுடாதே
அது ஆராது
அரவணைத்து இன் சொல்
கூறு ,குடை பிடிப்பார்
உன் நிலைக்காய்

நல்லவனாய்
நல்லோர் சொல்லுக்கு
இனியவனாய்
அவர் மனதில் நிலைப்பாய்
மறந்தும் தவறிடாதே
பிறவிக்குணம் என்பார்
பரம்பரையை ஏசிடுவார்

நல்லதை போற்று
பொறாமை தவிர்
பாரட்ட செயலாற்று
வீண் வாதம் செய்யாதே
பிரமாதம் - என
பார்பபோர் சொல்லக் கேள்
பார் போற்ற நீ வாழ்வாய்!

ஜவ்ஹர்

எழுதியவர் : ஜவ்ஹர் (20-Dec-14, 8:42 am)
Tanglish : vettri
பார்வை : 774

மேலே