மத மாற்றம்

மத மாற்றம் என்பது விஷ விளையாட்டு,
அன்றே மதமாற்றமென்பது சீண்டிட அல்லேலென,
மதம் பிடித்த யானையென சான்றோரும் இகழ,
மதமென்னும் பேயது இன்று பின்துறத்துகிறதே;

பிணிகள் பல நாட்டை பீடித்திழுக்க,
கற்பழிப்பு, ஏழ்மை என அல்லகள் பல இருக்க,
இம்மதமோ, அம்மதமோ சம்மதம் எமக்கில்லையென,
நம்மதத்தை எளியவரின்கண் வீண் திணிக்கின்றீரே;

எம்மதமும் சம்மதம் எனும்,
உயரிய நம் இந்து மதத்தின்,
உள்தத்துவத்தை நன் உணர்ந்து நடந்தால்,
நாட்டின் பெருமை மேலும் உயரும்;

நாட்டில் அமைதி நிலவ வேண்டுமெனில்,
மதத்தின் மேலுள்ள மோகத்தையகற்றி,
ஏழைகுடிமக்கள் வாழ்க்கையை மேம்படுத்தும்,
செயல்களில் நமை ஈடுபடுத்துவோம்!

எழுதியவர் : சம்பத் கல்கத்தா (20-Dec-14, 7:08 pm)
சேர்த்தது : sampath kolkata
பார்வை : 59

மேலே