எங்குள்ளாய் இறைவா

உனைத் தேடி வீண் அலைகிறேன்,
உண்மையைத் தேடி நான் அலைகிறேன்,
தெருத்தெருவாக தெரியாமலே திசையற்று,
உன் உருவைத் தேடி அலைகிறேன்;

நீ குடியிருக்கும் கோவிலில்,
மணிக்கணக்காக வரிசையில் நின்று,
உன் ஓர் உருவத்தின் ஊடே
உள்ளுருவம் காண முன் நான் விழைகிறேன்;

காண உனை ஓர் சிறப்புக் கட்டணமாம்,
இல்லையேல் பல நாட்கள் தாமதமாம்,
காவலரின் கையழுத்தினால் மட்டுமே,
உனை கணப்பொழுதினிலே காணக்கூடுமாம்;

வெற்றுடம்பில் சந்தனமிட்டு, மாலையணிந்து,
பெரும் ஒலியெழுப்பி கீதங்கள் பலர் உன்பால் பாட,
பாட்டறிவற்ற என்போன்ற மனிதர்களை,
என்றுமே நீயும் விலக்கியே வைப்பாயோ?

விவரமரியா மொழிதனிலே,
இசை பாடுகிறேனா அல்லது வசைபாடுகிறேனா,
என்றெனக்கறியாமல் என்பால் உனை ஈர்க்க,
அன்றாடம் வேதங்கள் பல நான் வாசிக்கிறேன்;

உபவாசம், விரதங்கள், பூசைகள் என
பலவித முயற்சிகள் கையாண்டு பலனற்று,
மனதின் பயத்தில் மருண்டு மட்டுமே உனை நான்,
நம்பவேண்டுமென்றால் இது உனக்கே நியாமமா?

காண உனையே வதங்கும் எனக்கு,
கூட நீ எனக்கும் உள்ளாய் என,
ஆதாரம் நீ அளிக்க வந்தாலே,
இருகின்றாய் நீயும் எனும் நம்பிக்கை ஓங்குமே!

எழுதியவர் : சம்பத் கல்கத்தா (20-Dec-14, 7:12 pm)
Tanglish : engullaai iraivaa
பார்வை : 68

மேலே