என்ன செய்வதாய் உத்தேசம் -குமரேசன் கிருஷ்ணன்
என்ன செய்வதாய் உத்தேசம்
--------------------------------------------------------
நிழல் எது ...
நிஜம் எது ...
அடிக்கடி
அறிய ஆசை
மனதிற்கு !
அறிந்தபின்
?
பூமிக்குள் புதைப்பதால்
விதைகள் மடியுமா ?
வேர்களின் வீரியம்
வெளியினில் தெரியுமா ?
கடிகார முட்களுக்குள்
காலங்கள் அடங்குமா ?
கடல்நீரின் சீற்றத்தை
கரைதான் தடுக்குமா ?
கதிரவன் ஒளியினை
கைகள் மறைக்குமா ?
காதல் இல்லாமல்
உயிர்கள் ஜனிக்குமா ?
நிலவு தேய்ந்தாலும்
வளராமல் இருக்குமா ?
நீரின்றி உலகு
உயிரோடு வாழுமா ?
பொய்களின் சூட்சுமம்
பொசுங்கி போகுமா ?
மெய்யான முகங்கள்
முழுவதாய் தோன்றுமா ?
பணக்காரர் நெஞ்சம்
பசியினை அறியுமா ?
ஒருவேளை உண்பவனின்
உணர்வு புரியுமா ?
கையூட்டு இல்லாமல்
காரியங்கள் நடக்குமா ?
கைம்பெண் மறுமணம்
கட்டாயம் ஆகுமா ?
விலையில்லா கல்வி
வீதியெங்கும் கிடைக்குமா ?
வியர்வை துளிகளின்
வலிமை ஓங்குமா ?
வயதானால் பிள்ளைகளின்
பாசம் குறையுமா ?
வலைப்பூவில் மட்டுமே
நட்பு தொடருமா ?
கடந்திட்ட பாதையின்
கால்தடம் அழியுமா ?
மறந்திட்ட தமிழரின்
தன்மானம் மலருமா ?
மதங்களின் உண்மை
மனிதனுக்கு புரியுமா ?
மறுபடியும் மண்ணில்
மனிதம் மலருமா ?
நம்பிக்கை உள்ளவனின்
வாழ்வினி ஜெயிக்குமா ?
நாளைய உலகம்
நல்லதாய் உதிக்குமா ?
நிழல் எது ...
நிஜம் எது ...
அடிக்கடி அறிய
ஆசை மனதிற்கு !
அறிந்தபின்
என்ன செய்வதாய் உத்தேசம் ?
(மறு பதிவு -குமரேசன் கிருஷ்ணன் )