பதுமையும் பசுமையும்

..."" பதுமையும் பசுமையும் ""...
செழிக்கும் இயற்கை அழகாய்
சிரிக்கும் சிறப்பான சிலையவள்
பசுமையும் பெண்மையும் ஓன்று
என்றுமதை பாதுகாப்பதே நன்று
நாகரீகமென்றே மேனிகாட்டியே
கூவித்திரிகின்ற குயில்களுக்கு
உவமைகள் கூறிட இலைமறை
கனியென்பர் உன்னதம் விளக்கிட
இலை மறைத்த கன்னியானாய்
இயற்கையோடு இணைந்தவளே,,
கோலமயில் கொடியிடை இதுவா
வேகமே எல்லாமும் மாறிவரும்
அறிவியல் தா(க்)கமான உலகிலே
அழகென்றே சீரழிவோருக்கும்
அழித்திடும் ஆணவத்துடையோரும்
அழகியதொரு சிந்தனை சிற்பமாய்
பதுமையிவளோ பசுமையோடு
பாடம் சொல்லுகிறாள் பாரீரோ
மரம் வளர்த்து மழை பெருக்கி
இயற்கையதை வளப்படுத்தியே
உலகை நாம் உயர்த்திடுவோம்,,,
என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...