தனியொரு அகராதி
தனியொரு அகராதி.
வெற்றி வெற்றி என்றே தமிழே வா.
பற்றி பற்றி நின்றே பழமையே வா.
பயம் பயம் என்று மிரள்வோற்கும்—பயம்
திருத்தும் அருள்முகம் அழகே வா..
பயம் என்ற சொல்லும் பயந்தோடும்.
பயந்தும் அச்சமும் நடு நடுங்கும்,
பயமும் அச்சமும் பழக்கமில்லை.-அதன்
பழக்கம் அறிவதும் வழக்கமில்லை.
அருமை என்றோர் மொழி யுண்டு.
அவளுக் கென்றோர் வழி யுண்டு.
அச்சமும் பயமும் அவள் மொழியில்
அப்படி எதுவும் கிடையாது.
பிறந்தோம் என்பது உண்மை யென்றால்
இருந்தோம் என்பதும் அவசியம்.—அந்த
அவசியம் தொலையும் பயம் இருந்தால்.
புவியதில் அவள்தான் வரலாறு.
குடும்பம் என்றொரு தன்னலம் துறந்த
தடையாய் நிற்கும் அச்சமும் மறந்த
கடமை உணர்ந்த அன்னைத் தமிழே வா/
உடமை உலகின் முதலே வா.
தமிழே தானொரு அகராதி நூலே!
தரணி என்பதன் பொருளும் போலே!
புவியதில் வாழ்வின் புதுமைச் சோலை.
அவசியம் வேறொன்று இனியென்ன வேலை.
கொ.பெ.பி.அய்யா.