கலைந்த கனவு

எனக்கு பள்ளித் தேர்வில் கொடுத்த கவிதைத் தலைப்பு.

கான மிசைத்திடும் குயிலும் - எந்தன்
---காதிற் முத்தமிழ் கூவுதற் போலும்
மோனத் திருந்தநம் வையம் - கொஞ்சம்
---முக்தி அடைந்தே சீரிய செந்தமிழ்
ஞானம் வளர்ந்தே இனிதாய் - இந்த
---ஞால வெளியிடை உலவுதற் போலும்
நானு மோர்க்கனா கண்டேன் - அதை
---நற்றமி ழாலே பாடியே நின்றேன் !

எத்திக்கும் வாழ்ந்திடும் மக்கள் - தான்
---என்றும் மொழிந்திடும் பேச்சினி லெல்லாம்
சுத்தத்தேன் தமிழிலே பேசி - அதன்
---சுந்தரம் தன்னைப் பெரிதெனப் போற்றி
சித்தமுந் தெளிவுறக் கண்டேன் - அந்த
---சிறிது காலாத்தில் செழுஞ்சுகம் எய்த
அத்தனை எண்ணமும் பாழாய்ப் - போக
---அமைந்ததே சமுகம் ஒ! கலைந்ததோ கனவு ?

எழுதியவர் : விவேக்பாரதி (21-Dec-14, 7:01 pm)
Tanglish : kalaintha kanavu
பார்வை : 112

மேலே