பனித்துளியே

வெண்ணிலாப் பெண்காற் கொலுசி லிருந்து விழும்மணியோ!?
மண்ணிலே விண்மீன் மணிமுத்தம் தானோ? மலைத்தியற்கை
கண்ணிலே காண வியப்புக் குறியை கவிழ்த்ததென்னே!
பண்ணிலே பாட பசும்புல் அமர்ந்த பனித்துளியே!

பனித்துளி நிலாப்பெண் கால் கொலுசு மணியா!
விண்மீன்கள் முத்தமா?
வியப்புக்குறியை தலைகீழாய் போட்டதா?
சிந்தித்தேன் ….புலப்படவில்லை
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்….

எழுதியவர் : சு.ஐயப்பன் (21-Dec-14, 12:18 pm)
பார்வை : 150

மேலே