தமிழ் எங்கள் செல்வமே
தமிழே உன் வனப்பால்
எழில் கொஞ்சும் நினைப்பால்
நாவில் ஊறும் இனிப்பால்
சொல்லில் தரும் சுவைப்பால்
மிஞ்சுகின்ற மிகைப்பால்
அள்ளி வரும் அணைப்பால்
தமிழ் எங்கள் செல்வமே
பரதம் ஆடிவரும் திளைப்பால்
பாடி நிற்கும் படைப்பால்
எண்ணம் தரும் களிப்பால்
கருணை கொள்ளும் மனப்பால்
கடவுள் தரும் அருட்பால்
கேட்கத் தகும் இசைப்பால்
தமிழ் எங்கள் செல்வமே
எழுத்துத் தரும் தரப்பால்
கவிஞன் எழுதும் தலைப்பால்
கவிதை எனும் கவிப்பால்
கொள்ளை கொள்ளும் தமிழ்ப்பால்
இளமை கொஞ்சும் துடிப்பால்
இன்பம் தரும் ஈர்ப்பால்
தமிழ் எங்கள் செல்வமே