அரசியல்

அரசியல் என்னும் போர்வாள்
அறியாமையை சாகடித்து,
அறங்களை அரியாசனத்தில்
- அமர்த்த வேண்டும்.

அரசியல் குளிர் தரும்
சாதனமாக இல்லாமல்,
தாகம் தணிக்கும் தண்­ணீராக
- இருக்க வேண்டும்.

அரசியல் சாக்கடை என்று
கூவி கொண்டு இருக்காமல்
அதில் உள்ளே சென்று சுத்தம்
- செய்ய வேண்டும்.

அரசியல் சண்டை போடும்
சாதகமாக இல்லாமல்
சமத்துவம் பாடும் வேதமாக
- இருக்க வேண்டும்.

அரசியலுடன் கைகோர்ப்போம்!
ஆனந்தத்தின் இருப்பிடமாக
தேசத்தை மாற்றுவோம்!

எழுதியவர் : ஸ்ரீ ஹேமலதா நாராயணன் (12-Apr-11, 3:13 pm)
சேர்த்தது : srihemalathaa.n
Tanglish : arasiyal
பார்வை : 359

மேலே