நகைச்சுவைக்காக

அவள் ; என் கையால அவர் தினமும் வெந்தும் வேகாம சாப்பிட்டார்.
மற்றவள் : இப்ப எப்படி இருக்கார் ?
அவள் : நொந்து நூடுல்ஸ் ஆயிட்டார்.

ஒருத்தி : உங்க வீட்டுக்காரர் ஆடிட்டரா?
மற்றவள் : இல்லை, ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிட்டு ஓடிட்டார்.

நண்பன் : மாப்ள, A /C பாருக்கு போகலாமா ?
அவன் : போறது 0/C , இதுல A /C கேக்குதாக்கும்

மாமனார் : என்ன மாப்ள, உடம்பெல்லாம் இப்படி காயமா இருக்கு?
மருமகன் : என் பொண்ணு கொஞ்சம் எரிஞ்சு பேசுவான்னு நீங்க சொன்னதை
தப்பா புரிஞ்சுகிட்டேன். அநியாத்துக்கு பாத்திரங்களை எறிஞ்சு வீசிக்கிட்டே பேசுறா.

ஒருத்தர் : அவர் போலி சாமியார்னு எப்படி சொல்றீங்க ?
மற்றவர் : அழிகின்ற பொருட்செல்வத்தை உங்களிடம் இருந்து பெற்று அழியாத அருட்செல்வத்தை
வழங்குகின்ற சாமியார்னு போர்டு வைச்சிருக்கார். சாமியார்க்கு எதுக்குங்க சொத்து ?

எழுதியவர் : ந. அலாவுதீன் (21-Dec-14, 5:57 pm)
பார்வை : 181

சிறந்த நகைச்சுவைகள்

மேலே