விறகுவெட்டியும் தேவதையும்

தன் நேர்மைக்குப் பரிசாக தங்கக் கோடாலி, வெள்ளிக் கோடாலி மற்றும் இரும்புக் கோடாலி மூன்றும் பெற்ற விறகு வெட்டியின் மனைவி ஒரு நாள் அதே கிணற்றில் விழுந்து விட்டாள். வழக்கம் போல் வந்த தேவதை முதலில் லட்சுமிராயை காட்டியது.

“இதுதான் உன் மனைவியா?” என்று கேட்டது.

விறகு வெட்டி உடனே “ஆமாம்” என்றான்.

தேவதை : அடப்பாவி, அப்போ நேர்மையா நடந்துகிட்டே, இப்போ இப்படி புளுகறே?

விறகு வெட்டி : ஆமா... நீங்க லட்சுமிராயை காட்டுவீங்க, நான் இல்லை என்பேன், அப்புறம் பிரியங்கா சோப்ராவை காட்டுவீங்க, அதுக்கும் இல்லை என்பேன், கடைசியா என் பெண்டாட்டியை காட்டுவீங்க, நான் ஆமாம்னதும் என் நேர்மைக்குப் பரிசா மூணு பேரையும் என் தலைல கட்டிட்டா நான் என்ன பண்றதாம்?

தேவதை :???????

எழுதியவர் : அருணை ஜெயசீலி (21-Dec-14, 7:03 pm)
பார்வை : 179

சிறந்த நகைச்சுவைகள்

மேலே