+பார்க்காத போது பார்க்கும் விளையாட்டு+
எங்கிருந்து கற்றுக்கொண்டாய்
இந்த விளையாட்டை?
எந்த விளையாட்டை?
பார்க்காத போது பார்க்கும் விளையாட்டை..
யார் பார்க்காத போது நான் பார்த்தேன்...?
நான் பார்க்காத போது எனைப் பார்த்தாய்!
அதை எப்படியடா நீ பார்த்தாய்?
அதானே... அதை எப்படி நான் பார்த்தேன்..
விளையாடாதே..! நீ எனைப் பார்த்துவிட்டு மாட்டி விடுகிறாயா..?
இல்லையே... எல்லாம் நீ கற்றுக் கொடுத்தது தான்..
நான் என்ன கற்றுக்கொடுத்தேன்...
பார்க்காத போது பார்க்கும் விளையாட்டை...
அப்போ.. நான் பார்க்காத போது எனைப் பார்த்தாயா?
இல்லை நான் உனைப் பார்க்கவில்லை...
பின் யாரைப் பார்த்தாய்?
வானிலிருந்த நிலவை..
அட.. அன்று அமாவாசையடா..
ஓ... அப்போ.. நான் உனைத்தான் பார்த்தேனோ....
பேசிப்பேசியே மயக்கிவிட்டாயே...!
நான் மயக்கவில்லை.. நீதான் என்னை மயக்கத்தில் ஆழ்த்திவிட்டாய்..!