கர்த்தர் பிறந்து விட்டார்
கரி வரைந்த ஓவியமாய் காரிருள்
குடிலில் குழந்தையின் குரல்
வானிலிருந்து வழிகாட்டியது விண்மீன்
வான் பார்த்து நடந்தார்கள் ஞானியர்
கால்கள் வலித்து களைத்தாலும்
கண்களில் களிப்பு ,கருத்தினில் இனிப்பு
கைகளில் ,பொன் ,வெள்ளை போளம் ,தூபம்.
மண்ணின் மைந்தன் மாட்டு குடிலிலா?
கடவுளின் தாழ்ச்சியையும் மாட்சியையும்
கண்டு மருண்டார்கள்.
குடிலின் உள்ளே ,
கன்னிமரியின் கைகளில் கர்த்தர்
ரத்தமும் சதையுமாய் ..
உலகத்து சூரியன் உதித்து விட்டார்
உள்ளத்து இருளினை உடைத்து விட்டார்
நான் உன்னை நேசிக்கிறேன் ... அதனால்
நீயும் பிறரை நேசி என்றார்
அன்புக்கு எல்லை ,இல்லை என்று
அலட்சியமாய் தன் உயிரும் தந்தார் .
ஒரு கன்னம் வலித்தாலும்
மறுகன்னம் காட்டு
மனிதத்தை புனிதமாய் மாற்று என்றார்
அது போலவே வாழ்ந்து வென்றார்
கர்த்தர் பிறந்து விட்டார்
கதிரவனாய்
காரிருள் மறைத்து விட்டார்