சட்டம் மாற்றப்பட வேண்டும்

இந்த கட்டுரை சிறுமி முதல் கிழவி வரை பாலியல் பலாத்காரம் செய்வதை பற்றியது..
வண்டி ஓட்டும்போது எப்படி நல்லபடியாக ஓட்ட வேண்டும், பாதுகாப்பாக ஒட்டவேண்டும் என்ற விழிப்புணர்வு தேவைபடுகிறதோ .
அதே போலே பெண் பிள்ளைகளை கல்வி பயிலவோ, வேலைக்கு அனுப்பவோ பாதுகாப்பாக போவதற்கு விழிப்புணர்வு தேவைப்படுகிறது.. ஏனென்றால் நமது இந்திய சட்டம் அப்படி இருக்கிறது.
முன்னாளில் தைரியமாக வெளியில் சென்றுகொண்டிருந்த நம் பெண்கள், இப்பொழுதெல்லாம் எவன் என்ன செய்வானோ என்ற பயத்துடன் செல்ல வேண்டியதாயிற்று. ஏனென்றால் ஒரு வயதான கிழவியகூட விட்டு வைக்க மாட்டேன்றானுங்க.
சில பள்ளி ஆசிரியர்கள் முதல் பல பரதேசிகள் வரை இந்த கேவலமான செயலை செய்கின்றனர்.
அவர்கள் வீட்டில் ஏதும் பெண் பிள்ளையை பெற்றெடுக்க வில்லையா? அல்லது பெண்கள் அவர்களுக்கு வாக்கப் படவில்லையா? என்பது சந்தேகமாகவே உள்ளது.
இவையெல்லாம் மாறவேண்டுமெனில் கண்டிப்பாக கடுமையான சட்டங்களால் மட்டுமே முடியும்.
கொலை செய்பவனை விட இந்த கொடிய செயலை செய்யும் கயவர்களுக்காகவேனும் அரசியல் சட்டம் மாற்றி அமைக்க வேண்டும்.
முடிந்தவரை இதை பகிர்ந்து நம் குழந்தைகளையும், பெண்களையும், நம் தாய்மார்களையும் காப்பாற்ற புது சட்டம் உருவாக
வழி வகுப்போம்.
ஏனென்றால் பெண்கள் இல்லாமல் நாம் பிறக்கவில்லை. பெண் இனம் காப்போம்.
நன்றிகளுடன்
தவம்.