கிருத்துமஸ்
விண்ணிலிருந்து ஒரு பனித்துளி
பூமியில் வந்து சேர சில மணித்துளி .............
வேத வாக்கியம் நிறைவேற
தீர்க்கதரிசனத்தின் உயிர்த்துளி ............
மேக கூடங்கள் ஓடிவிளையாட
தன்னிலும் பிரகாசிக்கும் ஒளியை கண்டு
சூரியனும் மறைய, சந்திரன் ஆவலாய் தலைநீட்ட ,
நட்சத்திர விண்மீன்கள் மின்ன ,
சமுத்திர அலைகள் ஒன்றையொன்று முந்திசெல்ல,
ஆறுகள் மகிழ்ச்சி பெருக்கால் கரைபுரள ,
மலைகளும் குன்றுகளும் துள்ளி குதிக்க ,
சகல சிருஷ்டிகளும் ஆரவாரத்துடன் நடனமாட .............
பாவத்தை போக்க என்பரன் இயேசு மண்ணில் உதித்தார் ..............
பரிசுத்த ஆவியினால் உருவாகி
கன்னி வயிற்றில் கருவாகி -இம்மண்ணில்
தேவமைந்தன் பாலன் அவதரித்தார்- நம்
ஏழ்மை நீக்க மாட்டுதொளுவம் தெரிந்தெடுத்தார்
உள்ளத்திலும் இல்லத்திலும் இடமில்லை
நம்மை உடுத்தி மகிழ்பவர்க்கு
கந்தையின்றி வேறில்லை .......
பிதாவின் கிருபையால்
உன்னதத்தில் மகிமை என்று
மகிழவன் பிறந்த நன்னாள்
கிருத்துமஸ் என்னும் திருநாள்