என்னவள்

மயிலே குயிலே
என் அரியணைக் கிளியே
உன் வதனம் வாடியே
இருப்பதேனோ சொல்லடி
என் மனதுக்கினியவளே

கண்ணே மணியே
என்றழைக்கையிலே
கனிவாய் உனைப் பார்க்கையிலே
குறையேதும் கண்டாயடி
என் மாமன் மகளே

காஞ்சி புறச் சேலையாலே
கனகாம்பரப் பூவாலே
உனை அலங்கரித்துப் பார்க்கையிலே
என்ன குறை கண்டாயடி
உன் முகம்வாடிப் போவதற்கு

உன் வாட்டமுகம் பிடிக்கலையே
கடுஞ் சொல்லும் தாங்கலையே
மதி கொஞ்சும் முகத்தினிலே
கனவில் ஏதும் சொன்னேனடி
என்னகத்தைக் கவர்ந்தவளே

பிரிந்திருக்க முடியலையே
பேசாமல் தாங்கலையே
உன் அழகுச் செவ்விதழாலே
உரிமையுடன் பேசுவாயடி
என் உளம் கவர்ந்தவளே

ஊடல் நீ செய்கையிலே
சினுங்கியே அழுகையிலே
இப்படி நான் காணலையே
உனக்காக ஏங்குறேனடி
எனக்காடையாய் ஆனவளே

அன்பானவளே
என் பண்பானவளே
மறந்திட்டு உன் கவலையெலாம்
அணைத்திட ஓடி வருவாயடி
சேர்ந்தே வாழ்ந்திடலாம்

ஜவ்ஹர்

எழுதியவர் : ஜவ்ஹர் (24-Dec-14, 12:46 pm)
Tanglish : ennaval
பார்வை : 157

மேலே