நீ நான் காதல்

பாரதியின் செல்லம்மா போல்
பார்த்துக்கொள்ள துடிக்கிறேனே
பாசம்கொண்ட மாமா உன்னை
பார்த்திடத்தான் தவிக்கிறேனே........
வள்ளுவனின் வாசுகி போல்
வாழ்ந்திடதான் அழைக்கிறேனே - நீ
வாரதிசை பார்த்து தினம்
வாடிமனம் கொதிக்கிறேனே.......
மதுரைவீரன் பொம்மி போல
மஞ்சம் தொட நினைக்கிறேனே
மாலைநேர பூக்கள் கொய்து
மாலைசூட உருகுறேனே.........
கோவலனின் கண்ணகியாய்
கோடியாண்டு வாழ்ந்திடவே - உன்
கோட்டைவாசல் நாயகியாய்
கோரிக்கையை வைக்கிறேனே.......
அல்லிக்கொடி நீரைப் போல
அணைத்துக்கொள்ள ஏங்குறேனே
அன்பனவன் கரம்பிடிக்க
அணுதினமும் விழிக்கிறேனே....
கருவிழியும் கண்ணிமை போல்
கட்டிக்கொள்ள துடிக்கிறேனே
காதலனே உன்னைக் காண
காத்து நாளும் கருகுறேனே......
வீணை மேவும் விரல்களாலே
வீரன் உன்னை மீட்டிடவே - என்
வீட்டுக்காரா நீ விரைந்து
வீடுவந்து சேர்ந்திடடா.........