paatal

ஆண்:
அடியேயடி அத்த மக
ஆவி துடிக்குது நெஞ்சு மேல
மனச மறைவா மறைச்சா நல்லால

பெண்:
அடடா அடச் செல்லக்கண்ணா
அன்னக்கி சொன்ன சொல்லு என்னா
என்ன ஒன்ன சேர்த்தா இனிச் சொல்லென்னா

கண்களால் பேசியே கற்பனை மூட்டினாய்
கற்பனைக் கடலிலே சொர்க்கத்தைக் காட்டினாய்
பெண்மையை மென்மையாய் பாடினாய் - என்
வெட்கத்தை மூலையில் முடக்க்pனாய்

ஆண்:
பகலில் ஒரு வெண்ணிலா உதித்தாலென்ன
இரவில் இரு வால் வெள்ளி முளைத்தாலென்ன

வாலிபம் என்னை வாட்டவே
வாசற்கதவூ திறந்து பார்க்கிறேன்
சாளரம் என்னை இழுக்கவே
சாரல்தான் தீண்ட நனைகிறேன்

காவியம் காதலை பாடவா வைத்தது
காதலே காவியம் பாடவே வந்தது
தேன்துளி கண்ணத்தை பருகவே பார்த்தது
மதுரச இதழை மொய்க்கவே நின்றது

பெண்:
மன்மதா உன்னை காணவே
மண்ணிலே மீண்டும் பிறப்பேனே
கண்ணணேநின் கீதங்கள் கேட்கவே
என்னாவி இதயத்தை துறப்பேனே .



பா. காயத்திரி
3ம் வருடம்
கலைப்பீடம்.
பேராதனை பல்கலைகழகம்.

எழுதியவர் : ப.காயத்ரி (24-Dec-14, 9:51 am)
பார்வை : 85

மேலே