SOFTWARE ENGINEER ஏக்கம்
படுக்கை அறையில் வராத உறக்கம்...
பேருந்து ஜன்னல் ஓரத்தில் வருகிறது
ஆறுமணி நேர உறக்கம்....
ஒரு மணி நேரத்தில் முடிகிறது...
விழி திறக்கும் போது கேட்கிறது.....
இறங்குமிடம் வந்து விட்டதா என்று..
பகலில் விழி திறந்து திறக்காமல் பணி செய்கிறோம்...
இரவில் விழி திறக்காமல் திறந்து பயணம் செய்கிறோம்
எனக்கு ஒரு ஐயம்..
நாம் இருப்பது இந்தியாவா???????அமெரிக்காவா????
இந்தியாவாக இருந்தால் நான் அடிமை
அமெரிக்காவாக இருந்தால் நான் வணிகன்