மரண விளம்பரம் - இராஜ்குமார்
மரண விளம்பரம்
~~~~~~~~~~~~~~
இருள் குடித்த
இன்றைய இரவோடு
இன்னொரு
மழலை மடிந்தது ..
தவறுதலாய் தான்
மருத்துவர் வருகை
செய்தி விழுந்த
செவியோடு..
நிலவர உருவம்
ஊடக போட்டியாய்
வழிமறித்த வழிகளில்
விடையிலா தேடலோடு
பெற்றோரின் வாழ்வு
அடுத்த இரவின்
நுனியில் உதிர்ந்தது
நூலிழை குழந்தை ..
" எடை குறைவு "
என்ற போர்வைக்குள்
எண்ணிக்கை நீண்டது
பிழையின்றி பிறந்த
பிள்ளைகள்
கவனமின்றி இறந்த
பிணங்களாய்
ஆடம்பர வசதி
அரசியல் விற்பனையாக
அடிப்படை வசதி
அறியாமலே தொடங்கிய
அரசு மருத்துவமனை
அடிக்கடி உறிஞ்சியது
அப்பாவி உயிர்களை ...
கருணை காட்டும்
கட்சிகளின் கண்களும்
ஊடகத்தோடு உறவாட ..
உடலுக்குள் துடித்த
உறுதியான உயிரும்
உலகை வெறுத்து
உடனே வெளியேற
உயிரின் பிரிவுகள்
ஊமை செய்திகளாய்
ஊடக உடம்பினுள்
உடனடியாக பிறந்தது ...
விற்பனை
விளம்பரத்தோடு...
- இராஜ்குமார்

