அகராதி தமிழில் வாழ்க்கை கவிதை

இல்லறம் என்பது இன்பசுகம் ....
இங்கிதம் சுரக்கும் இன்ப இடம் ....
இல்லறத்தில் இச்சையை குறைத்துவிடு ....
இதயத்திலும் இல்லறத்திலும் ...
இசைமகள் குடியிருப்பாள் .....!!!

இடக்கு மடக்கு வார்த்தை பேசாதீர் ...
இடர்களை தோற்ற எண்ணாதீர் ....
இஷ்ட தேவனை தினமும் நினை ....
இஷ்டம் போல் பெருகும் இங்கிதம் ...
இட்டறுதி என்பது வாழ்நாளில் இல்லை ....

இன்பன் தினமும் ஊழியம் செய்யணும் ....
இல்லக்கிழத்தி இல்லத்தை பார்க்கணும் ...
இல்லற ஒழுக்கத்தை எல்லோரும் பேணனும்...
இல்லாதவருக்கும் உதவி செய்யணும் ...
இந்திர லோகமே இல்லறத்தில் இருக்கும் ...!!!

+

இங்கிதம் - இன்பம்
இட்டறுதி ; வறுமை
இன்பன் ; கணவன்
இல்லக்கிழத்தி ;மனைவி

கவிதை ; அகராதி தமிழ் வாழ்க்கை கவிதை
கவிஞர் ; கே இனியவன்

எழுதியவர் : கே இனியவன் (25-Dec-14, 4:28 pm)
பார்வை : 80

மேலே