நாகூரின் நாயகனே
தமிழ்ச்சங்கம் கண்டிடாத
தனித் தமிழ் பேழை !
தரம் பார்த் தெனை ஒதுக்கிடாத
தனிக் கவிச் சோலை !
தவ மிருந்து பெற்றாளோ
தமிழன்னை உன்னை !
தவமென்ன செய்தேன் நீ
தமையனாக்க என்னை !
தளம் இறங்கி வந்தாயே
தமிழ் அமுது தந்தாயே !
கலை வளர்க்க நிதம் நீ
களை எடுத்து நின்றாய் !
கதை பேசிக் கதைக்கயிலும்
கவி மழையில் நனைத்தவன் நீ !
முத்துக் குளிக்கும் ஊரினிலே - தமிழன்னை
முத்தம் குளித்துப் பிறந்தவனோ நீ !
கம்பன் வீட்டுக் கட்டுத்தறிதான்
கவி பாடுமா என்ன !
இவன் கால்பட்டால் - கட்டாந்
தரையும் கவி ஊற்றெடுக்கும் !
கண்ணிமைக்கும் நேரத்திலும்
கவி அருவியென பொழிந்திடுவான் !
கள்ளமில்லா சிரிப்பினிலே - எங்கள்
உள்ளமெல்லாம் சிறை பிடிப்பான் !
நவரத்தினங்கள் சிறியனவே - எங்கள்
நாகூர் இரத்தினத்தின் முன்னிலையில்
செவி கொடுக்க மறந்தாலும் - உன்
கவி கொடுக்க மறவாதே !
நாகூரின் நாயகனே
நாள் முழுதும் காத்திருக்கேன் !
வாழ்த்து ஒன்னு சொல்லனுமே
அந்த வரிசை தாண்டி நான் வரணுமே !
நா வாங்கி வந்த வார்த்தை எல்லாம்
நாள் பட்ட பழசாச்சே !
நாட்பட்ட திராட்ச்சை இரசமாய்
என் நாகூர் கவிக்கு - தித்திக்கட்டும்
என் நா பட்ட வாழ்த்துக்களும் !
என் அன்பு அண்ணனுக்கு இந்த தம்பியின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !