தொட்டில் பழக்கம்,
தொட்டில் பழக்கம்
தொட்டில் வந்த பழக்கமடா!
சுடு காடு மட்டுமடா!!
நல்லதானால் நல்லதடா!
பொல்லதெனில் தொல்லையடா!
பக்கமெல்லாம் பாடமடா!
பழகும் வழி கூடுமடா!
திக்கெல்லாம் தேடலடா!
தெளிவது உன் ஞானமடா!
தீய வழி போகாதேடா!
தீயோர் முகம் பாராதேடா!
மாய வளை வீழாதேடா!
நேயங்கெட்டுத் தாழாதேடா!
நல்லவனின் பழக்கமடா!
நல்லதொரு உலகமடா!
பொல்லவனின் நெருக்கமடா!
பொய்வழியின் புதைக்குழிடா!
அஞ்சதிலே வளைவதடா!
ஐம்பதிலும் இளைவதடா!
பிஞ்சினிலே பழுத்ததடா!
நஞ்சதுதான் உதவாதடா!
சோகம் ஒரு சோதனையடா!
ரோகந் தரும் வேதனையடா!
மோகம் ஒரு தோசமடா!
தாகம் தீரா நாசமடா!
நல்ல குணம் கெடுவதடா!
நாழிகையும் அதிகமடா!
கெட்ட மனம் தேறாதடா!
சுட்ட பின்னும் நாறுமடா!
தொட்டில் குணம் நல்லதடா!
விட்டிடாத தொடர்ந்திடடா!
கெட்டதென பழக்கமடா!
விட்டதென விலக்கடா!
கொ.பெ.பி.அய்யா.