அமெரிக்கா -வெளிநாட்டு மோகத்தின் உச்சகட்டம்
படிக்க வெளிநாடு செல்கிறான் ,
பரவாயில்லை.
பணம் சம்பாதிக்க வெளிநாடு செல்கிறான்,
பரவாயில்லை.
ஆனால்,
வாழ்க்கையே வெளிநாடு தான் என்றால் எப்படி?
என் நண்பர் ஒருவருக்கு,
வெளிநாட்டில் வாழ ஆசை.
அவரிடம் கேட்டேன்,
அம்மா எங்கே?
அவரது பதில் இங்கே.
அப்பா எங்கே?
அவரது பதில் இங்கே?
சகோதர சகோதரிகள் எங்கே?
அதற்கும் அவரது பதில் இங்கே?
ஆனால்,
வாழ்க்கை மட்டும் எதற்காக அங்கே என்றேன்.
அவர் பதில் ஏதும் சொல்லவில்லை.
சிறிது நேரம் மௌனம்......
அந்த மௌனம் கழித்தும் நண்பர் சொல்கிறார்,
மச்சி நான் அமெரிக்கா போக வேண்டும் என்று.
பிறந்தது இங்கே,
வளர்ந்தது இங்கே,
படித்து அறிவில் தேர்ச்சி பெற்றது இங்கே,
உழைப்பு மட்டும் அமெரிக்காவுக்கு ?
என்னடா நியாயம்?
பரம்பரை சொத்துக்களான ,
அப்பா அம்மா சொந்தம் ,
என அனைத்தும் விட்டு தள்ளி விட்டு,
பணம் சுகம் எனும் ,
தற்காலிக சொந்தம் தேடி ஓடி,
என்ன கிழிக்க போகிறாய்....
வெளிநாடு செல் ......படி....
பணத்தை பெட்டியில் நிரப்பு.
ஆனால் வாழும் வாழ்க்கை ,
நம் நாட்டின் வாழ்வாக இருக்க வேண்டும்.
நம் நாட்டின் கலாச்சாரமாக இருக்க வேண்டும்.