நண்பன்

பாலாஜி

என் எண்ண ஓடைகள்
இஞ்சி புரையோடிய
கடும்பாறை கற்மனத்தில்
கலக்கம் சிறிதின்றி
கால் பதித்த
கருப்பு 'ARMSTRONG'...

கல்லூரி கடைசிபெஞ்சில்
கரும்பலகை கட்டுக்கதைகளை,
இளமை விற்று
காதல் செய்யாது,
ஓவியங்களில்
உயிர் செலுத்தி
உணர்ச்சிகளில் உயில் எழுதும்
தூரிகைகளின் 'DA VINCI'...

வஞ்சகம்,
வன்மமும் தன்
F.I.R இல் அவன்
பெயர்பொறிக்க
மெனக்கெட்டும்
விதிவிலக்கின் தரவரிசையில்
முதல் இடத்தில்
ஒளிந்து கொண்டு
அவைகளுடனும்
ஆடுகிறான்
கண்ணாமூச்சி
ஆட்டமொன்றை...

பேச்சின் இடைவெளிகளை
CONJUNCTION சிரிப்புகளால்
அறைநிரப்பும் மனிதர்களே...!

சிரிப்பின் நடனத்திற்கு
வார்த்தைகளை
சலங்கை கட்டும்
அவனிடமும்
கற்றுக்கொள்ளுங்கள்
"குறும் புன்னகையில் வாழ்க்கை எல்லாம்"...

என் புத்தக அறிவில்
நான் வாங்கிய
பட்டமெல்லாம்,
வெறும் சிரிப்பின்
வீச்சுக் காற்றில்
நூல் கட்டி
பறக்கவிட்டான்...

கசந்து வாழ்க்கையை
நான் பழித்த
காலமெல்லாம்,
சிரிப்பு பட்டாசுகளை
என்னுள் கொளுத்திவிட்டு
வெகுளியாய் தள்ளி நின்று
வேடிக்கை பார்த்தான்...

பாசமும் தான்
அவன் ஊட்டும்
கறி சோறுகளில்
இளைப்பாற,
அவன் மடிசூட்டில்
தாய் பார்த்தே
கட்டில்களை DIVORCE செய்தோம்...

வெறும் வார்த்தைகளில்
வண்ணம் பூசி
ஒப்புக்கு
உயர்த்திசொல்லும்
காதல் போல் அவனை
கட்டிப்போட மனமில்லை ...

நட்பு தேசங்களை
கலர் பூசும்...,
குழந்தைமன பறவைக்கு
சிறகசைய தான்
வான் அமைக்கிறோம்
மனமுடிச்சுகளை
ஜடை பிண்ணி ... -JK

எழுதியவர் : (27-Dec-14, 6:09 pm)
Tanglish : nanban
பார்வை : 217

மேலே