பெருமிதம் கொள்ளாதே

யாருமில்லாக் கரையினிலே
மஞ்சள் நிலவாக வலம்வந்து
கடல் நீர் என்னும்
கண்ணாடி பார்த்து
உன்னையே நீ காதலிக்கிறாய்
மண்ணிலே தவழ்ந்து வந்தால்
நீ நான் என்ற போட்டியிலே
எங்கே நாங்கள் வதையிந்திடுவோம்
என்றே எங்களை சீண்டுகின்றாய்
உன் அழகிலே மயங்குகின்றாய்
உன்னையும் மிஞ்சுமழகுண்டு
எங்கள் தென்னாட்டுப் பெண்ணிடத்தில்
ஆதலின் காதலில் வருத்தாதே
கவியின் கற்பனை வளமிகுதே
தலைகீழாக்குவான் உருவகத்தை
நீ தான் அழகென்று விளம்பாதே
நிலவே பெருமிதம் கொள்ளாதே