நட்புணர்வு மிளிர் நன்மணி-2014-விருது
தோழர்களுக்கு வாழ்த்தும் வணக்கமும்...
2015ஆம் ஆண்டின் முதல் விருதாக 'நட்புணர்வு மிளிர் நன்மணி -2014" எனும் விருதினை தளத்தில் ஐவர் பெறுகின்றனர்...
தோழர்கள்
சொக்கலிங்கம் சாந்தி
பழனிகுமார்
ராம் வசந்த்
நாகூர் கவி
குமரிப்பையன்
இவர்கள் அனைவரும் சிறப்புமிகு படைப்பாளிகள். சீர்மிகு சந்தப் பாவலர்கள். பல்வகை கருப் பொருட்கள் அமைந்த கவிதைகள் அளித்து வரும் ஆற்றல் மிக்கோர். பலரும் செய்யும் காரியங்கள் இவை.
அன்றியும் முரண் தவிர்த்து அன்பும் நட்பும் பலரிடமும் தளத்தில் தொடர்ந்து பாராட்டி வரும் இவர்களின் நட்புண்ர்வு மெச்சத் தக்கது. தளத்தின் பலரின் துக்கங்களில் பங்கேற்றவர்கள்.உதவிக்கரம் நீட்டும் ஆலம் விழுதுகள்.
பழனிகுமார் நட்பு சூழ தனது நூல் வெளியீட்டை நிகழ்த்தியதும் ... தனது தாய்தந்தை நினைவாய் தளத்தில் நட்புகளுக்காய் கவிதைப் போட்டிக்கு பரிசளித்ததும் .நட்புகளின் படைப்புகள் திருடப் படுவதை அறிந்து .வழிக் கண்ட ராம்வசந்த்...குமரிப்பையன் தளத்தின் நட்புகளின் சிறுகதைத் தொகுப்பு வெளிவர காரணாமாக இருந்ததும்....தளத்தின் பெண் படைப்பாளிகள் மத்தியில் நட்பு பாராட்டியும் பெண் படைப்பாளிகளின் தொகுப்பு வெளி வர காரணமாக சாந்தியும்......பலரிடத்திலும் நகைமுழக்கி நட்பு பாராட்டிவரும் நாகூர் கவியும்...வாழ்த்துககுரிய நட்பு இதயங்கள் அல்லவா.?
எனவே இவர்களுக்கு தளத்தின் "நட்புணர்வு மிளிர் நன்மணி-2014" எனும் விருது அளிப்பதில் மகிழ்ச்சி .
.