தண்ணீர் தண்ணீர்

..."" தண்ணீர் தண்ணீர் ""..

தண்ணீர் தாகம் வந்துவிட்டால்
தேக மோகமும் விட்டுவிட்டே
விலகிவிடும் குடி தண்ணீரே
உனக்காய் ஒரு உலகப்போர்
வருமென்று உடுக்கை குலுக்கி
குடுகுடுப்பைக்காரன் உரக்கவே
உரைக்கிறான் இந்த உலகிற்கு
போராடி பெரும் செல்வமதை
ஒருபோதும் போதாதென்பான்
வியர்வை சிந்த உழைத்தாலும்
தண்ணீர் சிறிதாய் அருந்திவிட
போதுமென்பான் அதனால்தானோ
பாதுகாத்திட மனமில்லா போனது
சாதகங்கள் மாறிவிடும் இங்கு
சாக்கடைகளும் சுத்தீகரித்தே
ஒருநாள் குடித்திட தரப்படலாம்
தண்ணீரை நாம் மிச்சப்படுத்தி
அநாவசியங்களை கட்டுப்படுத்தி
கைமாற்றி கொடுத்திடவேண்டும்
தண்ணீர் என்பது வருகின்ற
தலைமுறைக்கும் சம விகிதத்தில்
கணக்கு இருக்கிறது அதை நீ
கணக்காய் பயன்படுத்தாவிடின்
தாகித்து மரிக்கும் வரும் சந்ததி ,,,

என்றும் உங்கள் அன்புடன்,,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (28-Dec-14, 12:52 pm)
Tanglish : thanneer thanneer
பார்வை : 925

மேலே