ஒரு குரல் என்னை இசைக்கிறது

என் குரல் நீ கேட்டு
இசைகிறது என்றாயே
இசைப்பது என் குரல் அல்ல
உன் உயிர் மூச்சு.
என் சுவாசமாய் என்னுள்
நீ இருந்து கொண்டு
உன் சுவாசத்தில் நான்
என்னுள் உயிர் பெற்று.
என் குரலில் நீ கலந்து
உன் இதயத்தில் நான்
குடி அமர எனக்கு நீ
இடம் தருவாயா?
இனிய குரலோடு
இன்றே கேட்கிறேன்
இன்ப குரலாய் நான்
இருக்க இடம் வேண்டும்.
உன் மனதில் நான் மட்டும்
உன் செவியில் என் குரல் மட்டும்
உன் உடலை நான் மட்டும்
உறவு கொள்ள வேண்டுமடி..