பிளாஸ்டிக் உணவுகள் - இராஜ்குமார்
பிளாஸ்டிக் உணவுகள்
~~~~~~~~~~~~~~~~~~
பல் துலக்கவும்
பால் குடிக்கவும்
பிளாஸ்டிக்கை பிடித்தால்
சுரப்பிகள் சுருங்கி
நரம்புகள் தளரும் ...
உயர்தர உணவக
பிளாஸ்டிக் தட்டிலும்
துரித உணவக
பாலிதீன் விரிப்பிலும்
ரசாயன துகளோட
உணவின் உள்வாங்கல் ..
பாக்கெட் பாலும்
பசிக்கான பார்சலும்
பரிசத்தின் பக்கவிளைவு
பக்கங்களாய் விரிகிறது ....
குளிர்ப்பான சுவையோடு
உள்வாங்கும் துளியும்
உடையாத நுரையாய்
விலகாத குறையாய்
குடலினை குடைகிறது . .....
குடிநீர் குவளையும்
உணவு குடுவையும்
தலேட்ஸ் , டயக்சினை ...
உடலுக்குள் உள்தள்ளி
பிறப்புறுப்பை எரிக்கும்
கருச்சிதைவின் காரணி ...
சூடான உணவோடு
கோர்வையாய் நுழையும்
இரசாயன ரசங்கள் ..
உயிரை உரமாக்க
ஊடுருவும் உயிர்க்கொல்லி...
மைக்ரான் கவரோடு
ஆவி பறக்கும்
சாம்பார் , சாத, பொரியலோடு
விஷத்தினை விதைக்கும்
விதைகளின் துகளும் ...
புற்றுநோயைப் புகுத்தும்
புதுவிதக் காரணியாய்
புலன்களை பிழியும்
பிளாஸ்டிக் தவிர்த்தால் ..
தவணையில் தொலையும்
சுவாசங்கள் சுகப்படும் ..
- இராஜ்குமார்